திண்டுக்கல் அருகேயுள்ள ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் போன்றப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் திண்டுக்கல் கொண்டுவருவார்கள். அதேபோல் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்குப் பொருட்கள் வாங்குவதற்கு, தினமும் இப்பகுதிக்கு நூற்றுக்கணக்கானோர், இங்குள்ள ரயில்வே பாதையைக் கடந்து செல்லவேண்டும்.
இந்நிலையில் திண்டுக்கல் வழியாக பழனிக்கு சரக்கு ரயில் ஒன்று சென்றது. அப்போது பொதுப்பாதையை அடைக்கும் வாயில் காப்பாளர் இல்லாததால், ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர் பொதுமக்கள் இருபுறமும் இருப்பதைப் பார்த்து, முன்கூட்டியே ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி, ரயில்வே பாதையை அடைக்கும் வாயிலில் இருந்த சங்கிலியை இருபுறமும் மாற்றிவிட்டு, பொதுமக்களிடம் ரயில் சென்றவுடன், நீங்கள் செல்லலாம் எனக்கூறிவிட்டு, ரயிலை ஓட்டிச் சென்றார்.