நாட்டின் 17 ஆவது மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதற்காக இளைஞர்கள் தங்களது பணி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை பெற்று தங்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களித்தனர்.
வாக்களிக்க வந்த இளைஞர்கள் சிலரை சந்தித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் தேர்தல் கள நிலவரம் குறித்து கேட்டபோது, "நிலக்கோட்டைத் தொகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இங்குள்ள மக்கள் வாழ்கின்றனர்.
8 மணிக்கு மேல் இந்த ஊரில் தெருவிளக்குகள் இன்றி இருளில் தவித்து வருகின்றோம். சரியான சாலை வசதிகள் கிடையாது. குடிக்கும் நீருக்கு எங்குப் பார்த்தாலும் பஞ்சம் உள்ளது. இதனால் இந்தத் தொகுதிக்கு நன்மை செய்யக்கூடிய தகுந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டி நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என தெரிவித்தனர்.
நிலக்கோட்டையில் கலைகட்டிய வாக்குப்பதிவு!