தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீர் மேலாண்மை நுட்பங்கள் மூலம் மழைநீர் சேமியுங்கள்' - ஆட்சியர் அறிவுரை

திண்டுக்கல்: நீர் மேலாண்மை நுட்பங்களைப் பயன்படுத்தி மழைநீரை சேமிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

dindigul

By

Published : Sep 4, 2019, 3:08 PM IST

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஜல்சக்தி அபியான் என்னும் நீர் மேலாண்மை இயக்கத்தின் விவசாய மேளா நேற்றுநடைபெற்றது.

இதில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

விவசாய மேளா நிகழ்ச்சியில் ஆட்சியர் விஜயலட்சுமி

இதையடுத்து விவசாயிகளிடம் பேசிய ஆட்சியர், "நீர் மேலாண்மை குறித்த நுட்பங்களைத் தெரிந்துகொண்டு பொதுமக்கள் மழைநீரைச் சேமிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் ரூ.34 கோடி செலவில் 110 குளங்கள், 250 குட்டைகள் குடிமராமத்துப் பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிந்துவிடும்.

மேலும், குறைந்த நீர் நுட்பங்களான சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பான் பாசனம் போன்ற பாசனங்கள் மூலம் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் நீர் மேலாண்மை நுட்பங்கள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details