ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் இரயில் நிலையம் எதிரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தன. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அடிக்கடி இந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு நீதிமன்றங்களுக்கு இடையூறாக இருந்தது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே வேளாண் விளைபொருள் பேரங்காடி வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு நீதிமன்றங்களை மாற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மாற்றப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா திறந்து வைத்தார்.