திண்டுக்கல் மாவட்டம், பழனிபட்டியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரும், தாராபுரத்தைச் சேர்ந்த சசிபிரபா என்பவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இவர்களது பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு வழங்கக்கோரி புதுமண தம்பதி மனு..! - district police
திண்டுக்கல்:சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
![பாதுகாப்பு வழங்கக்கோரி புதுமண தம்பதி மனு..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3931796-thumbnail-3x2-jh.jpg)
new cupple
பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதி மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு
இதையடுத்து தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருவரும் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், இருவரது பெற்றோரையும் அழைத்து பேச உத்தரவிட்டுள்ளார்.