தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நக்சலைட்கள் ஆயுத பயிற்சி வழக்கு - தமிழ்நாடு முன்னாள் உள்துறை கூடுதல் செயலர் ஆஜர் - முன்னாள் உள்துறை கூடுதல் செயலர் ஆஜர்

திண்டுக்கல்: கொடைக்கானல் நக்சலைட்கள் ஆயுத பயிற்சி வழக்கில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு உள்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்டி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

dindugul
dindugul

By

Published : Feb 18, 2020, 8:10 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி புல்லாவெளி வனப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு நக்சலைட்கள் பதுங்கி ஆயுத பயிற்சி மேற்கொண்டனர். அப்போது சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர் நக்சலைட்களை கைது செய்யச் செல்லும்பொழுது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

அதில் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் உயிரிழந்தார். மேலும் அதுதொடர்பாக கண்ணன், காளிதாஸ், பகத்சிங், ரீனாஜாய்ஸ் மேரி, செண்பக வல்லி, ரஞ்சித், நீலமேகம் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட முதன்மை நீதிமன்றம்
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கில் தொடர்புடைய ரஞ்சித், நீலமேகம் ஆகிய இருவர் மட்டும் பிணையில் வெளியே உள்ள நிலையில் மற்றவர்கள் சிறையில் உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் 65 சாட்சியங்களில் 61 பேரிடம் விசாரணை முடித்துள்ளனர்.

62ஆவது சாட்சியாக தமிழ்நாடு முன்னாள் உள்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்டி, துப்பாக்கி தோட்டா படைக்கலன் நிபுணர் ராஜன் இருவரும் இன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி ஜமுனா முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் நீதிபதி வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நக்சலைட் நொண்டி மகாலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details