திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த 55 வயது மேலாளர் ஒருவருக்குக் கடந்த சில நாள்களாக கரோனா அறிகுறி இருந்துவந்துள்ளது. இதனால் அவர் தாமாக முன்வந்து நத்தம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளருக்குக் கரோனா! - ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
திண்டுக்கல்: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த மேலாளருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி அலுவலக மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி
இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் 61 ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.