திண்டுக்கல்:நத்தம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விசுவநாதன், நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை நேற்று (ஜூன் 27) திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின் தடைக்குக் காரணம், அத்துறையைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாததுதான். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தவுடன் மின்தடையும் வந்துவிடும்.
பிரிக்கமுடியாதது எது?
'திருவிளையாடல்' படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு ஏற்ற பொருத்தமான பதில், திமுகவும், மின்வெட்டுமே.
தமிழ்நாட்டில் உள்ள மின்வெட்டுப் பராமரிப்புகளை, நான்கு நாட்களில் சரிசெய்துவிடலாம். ஆனால், சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், முந்தைய திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது போல மாறும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய ஆட்சியில் மின்வெட்டுக்குக் காரணம், அணில் என சொற்ப காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஏழு ஆண்டுகளாக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த எனக்கு மின்வெட்டுக்குக் காரணம் அணில்தான் என்று தெரியவில்லை.
திமுக வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடும்
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட, ஒழுங்கு பிரச்னைகள் வந்துவிடும். அதேபோல் திமுகவையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது.