தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2021, 10:29 AM IST

ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் நத்தத்தில் முறைகேடு: 'கிணத்த காணோம்' கதைபோல் உள்ளதாகப் புகார்

நத்தம் பேருராட்சிப் பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவித்த பொதுமக்கள், வடிவேலு பட பாணியில் கிணத்த காணோம் என்ற கதைபோல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் நத்தத்தில் முறைகேடு
அதிமுக ஆட்சியில் நத்தத்தில் முறைகேடு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.

இவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும்பொருட்டு நத்தம் பேருராட்சி சார்பில் மெய்யம்பட்டி, நத்தம், கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நத்தம் பேருராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது.

டெண்டர் ரூ.4 லட்சம்: ஆனால் நடந்தது வேறு!

இந்த நிலையில் 2014 -2015ஆம் ஆண்டு நத்தம் பேருராட்சிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டது. அவற்றை அரசு ஒப்பந்ததாரர் சக்தி முருகன் என்பவர் டெண்டர் எடுத்துள்ளார்.

அப்போது நத்தம் பேருராட்சித் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் இருந்துள்ளார். மேலும் நத்தம் பேருராட்சி செயல் அலுவலராக வெங்கட்ரமணன் பணியாற்றிவந்துள்ளார்.

அப்போது நத்தம் பேருராட்சிப் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கு நான்கு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்காமல் பணம் எடுத்தது ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

ஒப்புக்கொண்ட வெங்கட்ரமணன்

மேலும் இராஜகுளம் காலனியில் மேல்நிலைத் தொட்டி 12 மீட்டருக்குப் பதிலாக 7.5 மீட்டர் மட்டுமே மேல்நிலைத் தொட்டி கட்டி, அவற்றிற்கு இரும்பு படிக்கட்டு கட்டுவதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

இதில் கடந்த ஆட்சியில் மோசடி நடந்திருப்பாக ஆடிட்டில் தெரியவந்ததால் ஒப்பந்ததாரரிடமிருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெற்றதாகவும் அப்பொழுது இருந்த நத்தம் பேருராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கிணத்த காணோம் கதைபோல்

கடந்த அதிமுக ஆட்சியின்போது சாலை அமைப்பது, குடிநீர் குழாய் அமைப்பது, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்ட பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபல நகைச்சுவையான கிணத்த காணோம் எனக் கூறுவதுபோல் நத்தம் பேருராட்சிப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்காமல் பணம் எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நடைபெற்ற ஊழல்களை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!

ABOUT THE AUTHOR

...view details