திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி வழங்கினார்கள்.
கந்தூரி விழாவில் 2,300 கிலோ கிராம் தடபுடலான பிரியாணி - மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கல்! - briyani
திண்டுக்கல்: வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

nabi nayagam birthday function at vedasandur Periya pallivasal
இவ்விழாவில் இந்து, கிறிஸ்தவர்கள் என அனைத்து மத மக்களும் பாகுபாடின்றி மகிழ்ச்சியுடன் பிரியாணி வாங்கிச் சென்றனர். இதுபோன்ற நிகழ்வுகள்தான் தமிழ்நாட்டில் மதப் பாகுபாடின்றி, அனைத்து மக்களையும் ஒன்றுகூடச் செய்து, மதச்சார்பின்மையை வளர்த்தெடுக்கிறது.
அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய மக்கள்
இதையும் படிங்க: பிரபாகரன் பிறந்தநாள் - நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம்!