திண்டுக்கல்:வத்தலக்குண்டு ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜீதீன் (30). இவர் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் தங்கி கட்டட காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வெள்ளக்கிணறு, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டடப்பணிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் (நவ.30) அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற 15 பேர் கொண்ட மர்ம கும்பல் தாஜீதீனை கட்டிப்போட்டு இரும்புக்கம்பி, அரிவாள், கத்தி, வயர், பிளாஸ்டிக்குழாய் பயங்கர ஆயுதங்களால் உடல் முழுவதும் கடுமையாக தாக்கி, லைட்டரால் சூடு வைத்தும் இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணிவரை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வத்தலக்குண்டில் உள்ள தாஜ்தீனின் தந்தை மற்றும் மனைவிக்கு போன் செய்து தாஜ்தீனை இரத்தம் சொட்ட சொட்ட வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர். விடிவதற்குள் உடனடியாக 5 லட்சம் பணம் கொண்டு வந்தால் தான் அவரை உயிருடன் விடுவோம் இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாஜுதினின் தந்தை அப்துல்லா தனது வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அக்கும்பல் தாஜுதீன் அணிந்திருந்த மோதிரம் உட்பட 4 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாயை பறித்துவிட்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு தந்தை அப்துல்லா வரும் வரை பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர்.