திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள பூலாம்பட்டி ராயல் கிளாசிக் பனியன் கம்பெனி அருகே முள்புதரில் இரண்டு தினங்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் உப்பிய நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.
திண்டுக்கல்லில் முள்புதரில் இறந்துகிடந்த இளம்பெண்: கொலையா? - திண்டுக்கலில் முட்புதரில் இறந்த கிடந்த இளம் பெண்: கொலையா ?
திண்டுக்கல்: சந்தேகத்திற்கிடமான வகையில் முள்புதரில் இறந்துகிடந்த இளம்பெண் மரணம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கலில் முட்புதரில் இறந்த கிடந்த இளம் பெண்
இத்தகவல் அறிந்த கள்ளிமந்தையம் காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒரு வாரமாக இவரைக் காணவில்லை என்று இவரது பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இவர் சந்தேகத்திற்கிடமான முறையில் முள்புதரில் உடல் உப்பிய நிலையில் இறந்துகிடந்ததைக் கண்டு பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளம்பெண் கொலைசெய்திருக்கப்படலாம் என்ற கோணத்தில்கள்ளிமந்தையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்த கணக்கம்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை, அவரது நண்பர் ஜெகதீஸ் ஆகிய இரண்டு பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கோயிலுக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - இருவர் கைது