தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 ஆண்டுக்குப்பின் அம்மன் கண்திறப்பு வைபவம்: திண்டுக்கல்லில் அலைகடலென திரண்ட பக்தர்கள் - விஜயநகரப் பேரரசு

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அம்மன் கண்திறப்பு வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அம்மன் கண்திறப்பு வைபவம்

By

Published : Oct 21, 2019, 11:11 PM IST

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். மிகவும் பிரசித்ப்பெற்ற இக்கோயிலின் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 13ஆம் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் கண் திறப்பு இன்று நடைபெற்றது. இதனையொட்டி அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திண்டுக்கல் தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக அம்மனுக்கு தங்கள் விளைநிலத்தில் விளைந்த விளைபொருள்களை பக்தர்கள் சூறைவிட்டு காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தனர்.

அம்மன் கண்திறப்பு வைபவம்

இதையும் படிங்க: பசுவின் வயிற்றில் 52 கிலோ நெகிழி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details