திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வருவாய்ப் பிரிவில் வருவாய் உதவியாளராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட இருளகுடும்பபட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனது வீட்டின் மதிப்பை குறைத்து தருவது குறித்து கிருஷ்ணனிடம் பேசியுள்ளார், அதற்கு அவர் ரூ. 6000 கையூட்டு கேட்டுள்ளார். இதுகுறித்து, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ராமலிங்கம் புகார் அளித்துள்ளார்.
கையூட்டு வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி நாகராஜ் தலைமையிலான காவல் துறையினர் தங்களுடைய ஆட்களை வைத்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேனீர் கடைக்கு கிருஷ்ணனை வரவழைத்து பணத்தை வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் சுமார் 5மணி நேரத்திற்கும் மேலாக கிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கிருஷ்ணன் தனது தவறை ஒப்புக்கொண்டதின் அடிப்படையில் கிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க : கையூட்டு வாங்கிய நான்கு காவலர்கள் பணி நீக்கம்!