தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை - போலீசார் விசாரணை - தற்கொலை செய்திகள்

திண்டுக்கல் அருகே நான்கு வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

dindigul news  dindigul latest news  suicide  mother suicide with son  mother suicide with four years old son in dindigul  மகனுடன் தாய் தற்கொலை  திண்டுக்கல் செய்திகள்  தற்கொலை  தற்கொலை செய்திகள்  திண்டுக்கல்லில் மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்
தற்கொலை

By

Published : Oct 17, 2021, 11:51 AM IST

திண்டுக்கல்:செட்டியபட்டி அருகே உள்ள வேளாங்கண்ணிபுரத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸி (24). இவருக்கும் தோமையார்புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கஸ்பார் என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தீமோஸ்லிவி என்ற நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (அக். 14) மதியம் தோமையார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் செட்டியபட்டிக்கு சென்ற பிரின்ஸி, அவ்விடத்திற்கு செல்லவில்லை. இதையடுத்து அவரது கணவர் ஸ்டீபன் கஸ்பர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை எனப் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (அக்.16) தோமையார்புரம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் பிரின்ஸியும், அவரது நான்கு வயது ஆண் குழந்தை தீமோஸ்லிவி இருவரும் உயிரிழந்த நிலையில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.

இதையடுத்து சம்பவ இடததிற்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பிரின்ஸி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மீன் வியாபாரியிடம் செல்போன், பணம் பறித்த மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details