தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரை விட்ட சோகம் - நத்தம் தாயும் மகனும் உயிரிழப்பு

நத்தம் அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரை விட்ட சோகம்
மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரை விட்ட சோகம்

By

Published : Mar 9, 2022, 8:35 AM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே பண்ணியா மலையைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிவக்குமார் (40). இவருக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். சிவகுமாருக்கு சில ஆண்டுகளாக இருதய நோய், சிறுநீரகப் பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மார்ச் 07ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சிவகுமாரின் இறுதிச்சடங்குகள் செய்வதற்காக அவரது உடல் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

மகனினை நினைத்து அழுது கொண்டிருந்த தாய் மருந்திஅம்மாள் நேற்று (மார்ச் 08) அதிகாலை மயங்கிய நிலையில் கீழே சரிந்தார்.

அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கியபோது அவரது உயிர் பிரிந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மகன் மற்றும் தாய் ஆகிய இரு உடல்களுக்கும் இறுதி சடங்கு செய்தனர்.

இதையும் படிங்க:யுவராஜூக்கு ஆயுள் தண்டனை: 'தூக்கை விட சரியானது இது' - கோகுல்ராஜின் தாயார்

ABOUT THE AUTHOR

...view details