தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் பூங்காவில் குரங்கு தொல்லை - அவதிக்குள்ளாகும் சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

monkey creates trouble for tourists
monkey creates trouble for tourists

By

Published : Mar 6, 2020, 8:20 AM IST

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கான‌லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பசுமை மிகுந்த பிரையண்ட் பூங்காவை ரசித்தும், தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டு இளைப்பாறும் இடமாகவும் இருந்து வருகின்றது.

ஆனால் சமீப காலமாக சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் தின்பண்டங்களைக் குறிவைத்து குரங்குகள் கூட்டம் பிரையன்ட் பூங்காவைச் சுற்றி வருவதால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

பிரையண்ட் பூங்காவில் குரங்குகள் தொல்லை

சுற்றுலாப் பயணிகளிடம் உள்ள தின்பண்டங்களை குரங்குகள் பறித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இதனால் அமைதியை விரும்பி இளைப்பார பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குரங்குகளின் தொல்லையால் அவதிக்குள்ளாகி உடனடியாக பூங்காவை விட்டு வெளியேறி விடுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பூங்கா நிர்வாகம் குரங்குகளை அப்புறப்படுத்தி, காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details