தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்! - உரிய ஆவணமனின்றி கொண்டு செல்லப்பட்ட பணம்

கொடைக்கானல் மயிலாடும்பாறை அருகே உரிய ஆவணமனின்றி கொண்டுவரப்பட்ட ரூ.74,930-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்

By

Published : Apr 5, 2021, 10:16 PM IST

தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலானது நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதிக்கு உள்பட்ட கொடைக்கானல் மயிலாடும் பாறை அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பகுதியை நோக்கி சென்ற பிக் அப் வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது, அதில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 74 ஆயிரத்து 930 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் வாகன ஓட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பதும், இவர் கொடைக்கானல் மலை பகுதியில் மொத்தமாக முட்டை வியாபாரம் செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் பறிமுதல் செய்த பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தங்கக் கட்டிகள்: ஆவணங்கள் சரியாக இருந்ததால் திரும்ப ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details