தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய அணையைப் பார்வையிட்ட எம்எல்ஏ பரமசிவம் - akshmanampatti dam

திண்டுக்கல்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள லட்சுமணம்பட்டி அணையை சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் நேரில் சென்று பார்வையிட்டார்.

பரமசிவம் எம்எல்ஏ
பரமசிவம் எம்எல்ஏ

By

Published : Dec 5, 2020, 7:16 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள லட்சுமணம்பட்டி அணை மூன்று மாதங்களுக்கு முன்பு குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டது. அதைத்தொடர்ந்து, புரெவி புயல் காரணமாக வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவந்தது. அதனால், லட்சுமணம்பட்டி அணை 10 ஆண்டுகளுக்குப் பின் முழுவதும் நிரம்பியது.

அதனையறிந்த வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், நேரில் சென்று அணையைப் பார்வையிட்டார். அத்துடன் வேடசந்தூர், அதனைச் சுற்றியுள்ள 15 வார்டுகளிலும் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர்ப் பற்றாகுறை இருக்காது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டிய ஹோல்ஸ் ஒர்த் அணை!

ABOUT THE AUTHOR

...view details