திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமெச்சூர் ஆணழகன் சார்பாக 29ஆவது சீனியர் "மிஸ்டர் திண்டுக்கல்" ஆணழகன், பிட்னஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 உடற்பயிற்சி கூடத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 55, 60, 65, 70, 75, 80, 80 கிலோவுக்கும் மேல் ஆகிய ஏழு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் தங்களது உடற்கட்டுகளை காண்பித்து பலவிதமான முறையில் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரெண்ட் பைஃப் சாப்ஸ், அப் டாமல், சைட் செஸ்ட் போன்ற முறையில் போஸ்கள் செய்து காண்பித்தனர். இறுதியில் திண்டுக்கல்லின் ஆணழகனாக அர்ணால்டு ஜிம்மை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.