தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் தமிழ்நாடு அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு 1,500 பயனாளிகளுக்கு 6 கோடியே 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்களை வழங்கினார்.
1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர் - Presented by the Minister of Higher Education
தருமபுரி: 1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழான பயன்களை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
![1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4669341-thumbnail-3x2-mini.jpg)
1500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் அமைச்சர்
1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்
விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், ‘தமிழ்நாடு அரசு தருமபுரி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி போன்றவற்றை தொடங்கியுள்ள காரணத்தால் மாவட்டத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்விழாவில் 1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ