திண்டுக்கல்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறி குறைகளைக் கேட்டறிந்தார். பின்பு பள்ளியில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகளுக்குச் சென்று சுகாதாரமாக உள்ளதா என்று ஆய்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளிடம் திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார். முன்னதாக அமைச்சர் உதயநிதி பள்ளிக்கு வரும்போது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மாணவி ஒருவர் ’பல கோடி மக்களின் அமைச்சராம், மக்களில் இளஞர்களில் ஒருவராம் உங்களை முக மகிழ்ச்சியோடு வருக வருக என வரவேற்கிறோம்’ என கவிதை போல் அமைச்சர் உதயநிதி குறித்து பேசி அவரை வரவேற்றார். பின்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.