திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் 219ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (செப்.05) வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அனுபவித்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியின் முகக்கவசத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அகற்றச் சொன்னதால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்றாக விளங்குவது, முகக்கவசம் அணிவது தான். ஆனால், ஆட்சியரை அமைச்சரே முகக்கவசத்தை அகற்றச் சொன்னது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஆட்சியரோ முகக்கவசத்தை அகற்றாமல் கோபால் நாயக்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து விட்டுச் சென்றார்.