தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத சண்டையை உருவாக்குவதே திமுகதான் - திண்டுக்கல் சீனிவாசன் - 2021 தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: இந்துக்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கும் சண்டை இழுத்துவிடுவதே திமுகதான் என திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

dindigul sinivasan
dindigul sinivasan

By

Published : Dec 10, 2020, 4:50 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பகுதியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சண்டை இல்லாமல் சமத்துவத்துடன் இருந்துவருகிறார்கள்‌. அவர்களிடையே சண்டையை உருவாக்கி அதை வைத்து அரசியல் செய்வதே திமுகவினர் வேலையாக உள்ளது. உதயநிதி பரப்புரைக்கு செல்லும்போது காவல்துறை அலுவலர் ஒருவர் 144 தடை உத்தரவு உள்ளது, இங்கு பரப்புரை செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்.

அப்போது, இன்னும் மூன்று மாதங்களில் ஆட்சிக்கு வந்து விடுவோம், உங்களை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம் என்று ஒரு அலுவலரை மிரட்டியிருப்பது, மிகவும் கண்டிக்க கூடிய விஷயம் எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:சத்தியமங்கலம் மாட்டுத் தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details