திண்டுக்கல்:பழனி அருகே உள்ள வயலூர், தாளையம், போதுப்பட்டி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் வட்ட வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கரோனா நிவாராணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அப்போது, 14 வகையான மாளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை கரோனா நிவாரண நிதியையும் அமைச்சர் சக்கரபாணி மக்களுக்கு வழங்கினார்.