திண்டுக்கல்:மாவட்ட வன அலுவலகத்தில், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட வனத் துறை மற்றும் வேளாண் உழவர் பாதுகாப்புத் துறை சார்பில் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் வனத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள், வனத் துறை அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடும் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ஐ. பெரியசாமி, “பசுமைப் போர்வைத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை வழங்கும் திட்டம் இன்று (நவம்பர் 22) தொடங்கப்பட்டுள்ளது.