தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக பாடநூல் கிடங்கில் அமைச்சர் திடீர் ஆய்வு.. பின்னணி என்ன? - tamil news

பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களும் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என தமிழக பாடநூல் கிடங்கில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு; பாட புத்தகங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என சோதனை!
தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு; பாட புத்தகங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என சோதனை!

By

Published : May 30, 2023, 10:27 AM IST

தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு; பாட புத்தகங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என சோதனை!

திண்டுக்கல்: பழனி சாலையில் உள்ள தமிழக பாடநூல் கிடங்கில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களும் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என அதிகாரியிடம் விவரம் கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஏப்ரல் மாதமே தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஏப்ரல் மாதமே அனைத்து புத்தகங்களும் தயாராகி விட்டன.

தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் 296 பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் 200 பள்ளிகளுக்கு மேல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை விரைந்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய்விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்தாலும் மற்ற பகுதியில் இருந்து யானை பார்ப்பதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர். மேகமலையிலிருந்து வந்த அரிசி கொம்பன் யானை தற்பொழுது மீண்டும் மேகமலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாடநூல் கழக தலைவர் லியோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகங்கள் 3 கோடியே 56 லட்சம் தயாராக உள்ளது.
அரசு பள்ளிகளுக்கு தேவையான இலவச பாட புத்தகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயாராக உள்ளது.

மேலும், அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப்பை, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷூ என 11 பொருட்கள் 80 சதவிகிதம் தற்பொழுது தயாராக உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் அனைத்து இலவச பொருட்களும் முதலமைச்சர் கரங்களால் கொடுப்பதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும், மக்களுக்கான அறிவிப்பு என்னவென்றால், அரசு பள்ளிகளில் 75% பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி உள்ளது.

ஆங்கில வழி கல்விக்கு ஆசைப்பட்டு ஏராளமான பொதுமக்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் மாணவனை சேர்த்தால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் கல்லூரி வரை இலவசமாக கல்வி கற்கலாம். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் டாக்டர் கலைஞர் பற்றி திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடத்தில் அவரைப் பற்றி ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் முத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு விழா நிறைவை ஒட்டு அவரை பற்றிய சிறப்பு பாடமே கொடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு விழிப்புணர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details