திண்டுக்கல்:கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சர்கள், பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா திண்டுக்கல் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 33 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் என 188 பயனாளிகளுக்கு ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி உள்ளிட்ட 16 வகையான மளிகைப்பொருட்கள் ஆகியவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அப்போது திமுகவையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் வழங்கியது, கருணாநிதி தான். இன்று இவ்வளவு மின்சாரம் கிடைக்கக்காரணம் கருணாநிதி தான். ஏதோ ஒரு சூழ்நிலையில் பதவி பெறுபவர்கள் மக்களின் எண்ணங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. அவர்களுக்கு கொள்கை, லட்சியம் கிடையாததே அதற்குக் காரணம்' என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன்!