திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண நிதி வழங்கும் விழாவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,000 வழங்கினார்.
மேலும் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, சர்க்கரை, ரவை, உளுத்தம் பருப்பு, புளி, கடலைப்பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், குளியல் சோப், துவைக்கும் சோப் உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு கடன் வழங்கப்படும்.