திண்டுக்கல் மாவட்டத்தில் நடமாடும் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோவிந்தாபுரம் பகுதியில் இன்று (மே 24) தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, "கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை அடங்கிய வாகனம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், ஒவ்வொரு தெருக்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்யும் விதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 234 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் செயல்படும்.