தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு: ஜெயலலிதாவின் பங்கு என்ன? - local body elections

திண்டுக்கல்: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாகப் போராடினார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Dindigul Srinivasan

By

Published : Nov 16, 2019, 8:10 PM IST

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 66ஆவது கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு 2,490 பயனாளிகளுக்கு ரூ. 13.77 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Minister Dindigul Srinivasan

இவ்விழாவில் பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "2011ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது கூட்டுறவு சங்கங்களை சீரமைத்து செம்மைப்படுத்தி சட்டப்போராட்டம் நடத்தி பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்தார். அதன் விளைவாக தற்போது உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் பொருள்கள் வாங்கியதும் அவர்களுக்கு குறுஞ்செய்தி சென்று சேரும் வகையில் உள்ளதால் முறைகேடு நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலையாவது நடத்தவிட வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ‘உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருக்க ஸ்டாலின்தான் காரணம்’ - திண்டுக்கல் சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details