திண்டுக்கல்: தொப்பய்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும், அனைத்து நியாயவிலைக் கடைகளும் விரைவில் சொந்தக்கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்படும். இதன்மூலம் வாடகைக் கட்டடத்திற்கு கொடுக்கப்படும் ரூ. 618 கோடி நிதி மிச்சமாகும்.