தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாகாவரம் பெற்ற பாடல்களை பாடியவர் எஸ்பிபி - செல்லூர் ராஜூ இரங்கல் - SBP who sang the songs of the deceased

திண்டுக்கல்: சாகாவரம் பெற்ற பாடல்களை பாடியுள்ள எஸ்பிபியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

spb
spb

By

Published : Sep 25, 2020, 7:32 PM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. எம்ஜிஆரின் அடிமைப்பெண் தொடங்கி தற்போதுள்ள இளம் நடிகர்களுக்கும் எஸ்பிபி பாடியுள்ளார்.

எஸ்பிபியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - செல்லூர் ராஜூ

எம்ஜிஆரின் பாடல்களில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த அவரது குரல் இன்றளவும் மக்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு கலைஞனின் குரல் காலத்தால் சாகாவரம் பெற்றது என்றுதான் கூற வேண்டும். உண்மையில் அவரது இழப்பு இசையுலகிற்கும், அவரது ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாதது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாடும் வானம்பாடி மறைந்தது - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details