திண்டுக்கல்: தைப்பூச தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொடைக்கானலில் தைப்பூசத்தை முன்னிட்டு டிப்போ பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 1001 பால்குடம் எடுத்து ஊர்வலமாக நாயுடுபுரம் வழியாக சென்று குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயில் வரை சென்றனர்.
Thaipusam 2023:கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவருக்கு 1001 பால்குடம் எடுத்து வழிபட்ட பக்தர்கள் - Murugan Temple in Kodaikanal
கொடைக்கானலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு, குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு 1001 பால் குடம் எடுத்து பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
Thaipusam 2023:Video: தைப்பூசம் திருநாளை ஒட்டி: முருகனுக்கு பால் அபிஷேகம் சிறப்பு வழிபாடு
வழிநெடுகிலும் முருகப்பெருமானின் பாடல்கள் பாடியும் நடனமாடியும் சென்றனர். தொடர்ந்து குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில் முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:தைப்பூசத் திருவிழா கோலாகலம்: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்..