தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடியின மக்களுக்கு விரிவான காப்பீட்டுத் திட்ட முகாம் தொடக்கம் - பழங்குடியின மக்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.

tribles
tribles

By

Published : Mar 1, 2020, 8:54 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வடகாடு ஊராட்சி பெத்தேல்புரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பழங்குடியின மக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மலைப்பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களில் பலர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாமலே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு முறையாக இணையத்தில் அவர்களது விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பழங்குடியின மக்களுக்கு இலவச காப்பீடு திட்ட முகாம்

மேலும், புகைப்படம் எடுத்துக்கொண்டால் விரைவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு அரசு அரணாக இருக்கும் - பழனிசாமி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details