தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழா: பணிகள் தீவிரம் - Dindigul new medical college

திண்டுக்கல்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகையையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

medical college
medical college inagural

By

Published : Mar 13, 2020, 10:56 PM IST

திண்டுக்கல் மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிறுவப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டு அளவீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மருத்துவ கல்லூரிக்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக இப்பகுதியில் மேடை மற்றும் பார்வையாளர்களுக்கான பந்தல் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கோட்டை போல முகப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பிரமாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழா பணிகள் தீவிரம்

மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் வரும் முதலமைச்சருக்கு பிரமாண்டமான வரவேற்பளிக்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகள் கட்டியவாறு முதலமைச்சரை வரவேற்கும் வரவேற்பு பதாகைகளை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:திருவிழாவில் சமூகப் பாகுபாடு: அம்மன் வீதி உலா வராததால் மக்கள் கவலை!

ABOUT THE AUTHOR

...view details