தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறாதது ஏன்? - மதிமுக துரை வைகோ சரமாரி கேள்வி! - Tamilnadu Chief Minister

MDMK General Secretary Durai Vaiko press meet: திண்டுக்கல்லில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

MDMK
மதிமுக

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 11:00 PM IST

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்கு துவங்கப்பட்டது தான் அமலாக்கத்துறை. 3 கோடி லஞ்சம் கேட்டு கைதான அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறையைப் பயன்படுத்தி இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது என இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் எதிர்க்கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் உள்ளது. பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் ஊழல் செய்யவில்லையா? அங்கு ஏன் இது போன்ற அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறவில்லை.

தமிழக அரசு அதிகாரிகள் செய்கின்ற குற்றச்சாட்டுக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது நல்லதா. தமிழக அரசை குற்றம் சாட்டும் அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதை மட்டும் ஏன் சரியான பதில் கூற மறுக்கிறார்.

மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய சென்றது தவறு என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியது தொடர்பான கேள்விக்கு, முன்னாள் இருந்த ஆளுநர்கள் நடுநிலைமையோடு செயல்பட்டு வந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத்வின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி ஆளுநரைப் பொறுத்தவரை பாஜக பேச்சாளராக தான் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எங்க வேண்டுமானாலும் சோதனை செய்ய முழு உரிமை உள்ளது. 5 மாநிலத்தேர்தலில் 4 மாநிலத்திற்கு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு தான் இதைப்பற்றி கருத்து கூற முடியும்.

விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு அனைத்திற்கும் மூல காரணமே மத்திய அரசு தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விலைவாசி உயர்வானது பாஜகவிற்கு எதிராக பிரதிபலிக்கும். இந்தியா கூட்டணியில் மதிமுக தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம்.

மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விருப்பமாக உள்ளது. இது குறித்து கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்போம். அவர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.

பாஜகவில் அண்ணாமலை தலைமைக்கு வந்த பிறகு, அவரது கட்சியில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் கோயில் நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள், கோயில் சிலையைத் திருடியவர்கள், நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் இது போன்ற நிறைய நபர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். தவறான நபர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு அரசியல் செய்வது தான் மெச்சூரிட்டி என்று அண்ணாமலை கருதுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட சென்னை - டெல்லி ரயில் மீண்டும் இயக்கம் - ரயில்வே அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details