திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் ரோட்டோரங்களிலும், நிழலுக்காகவும், அழகுக்காகவும் அதிக அளவிலான, 'மே பிளவர்' மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இவ்வகை மரங்கள் நெடுஞ்சாலைகள், மலைப்பாதைகளில் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த மரம் இந்தியாவில், 'குல்முஹர்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 'டெலோனிக்ஸ் ரிஜியா' என்பது இந்த மரத்தின் தாவரவியல் பெயர். தமிழில் மயில் கொன்றை என அழைக்கப்படுகிறது. பூப்பூக்கும் காலம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது.
நத்தம் பகுதியில் பூத்துக்குலுங்கும் மே பிளவர் பூக்கள் நத்தத்திலிருந்து செந்துறை கொட்டாம்பட்டி மதுரை செல்லும் சாலைகளில் அதிகளவில் பெரும்பாலான இடங்களில், சிகப்பு நிறத்தில் கண்ணைக்கவரும் வகையில், பூத்துக்குலுங்குகின்றன.வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான மரங்கள், இலை உதிர்த்து காணப்படுகிறது. 'மே பிளவர்' மரங்கள் பசுமையாக, பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சாலையோர மக்கள், மரங்கள் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இணைய வழி மலர் கண்காட்சி