திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை சாமியாடியூர் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கட்டுமானத் தொழிலாளர்களாக பணிபுரித்து வருகின்றனர். இவர்களது வாழ்வாதாரம் கட்டுமானத் தொழில் மட்டுமே.
இவர்கள் அனைவரும் முறையாக கட்டுமான சங்கம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் அட்டை பெற்றுள்ளனர்.
ஆனால் வெளியூர்களிலேயே தங்கி கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்துவந்த நிலையில் அதனை நடப்பாண்டிற்கு புதுப்பிக்காமல் விட்டதாக தெரிகின்றது.
வறுமையில் கட்டுமானத் தொழிலாளர்கள் தற்போது கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் சாமானியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது சாமியாடியூர் கிராம கட்டுமானத் தொழிலாளர்களின் நிலையும் கடும் வறுமையை எட்டியுள்ளதையே காட்டுகிறது.
நலவாரிய அட்டைதாரர்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் பேட்டி நலவாரிய அட்டை புதுப்பிக்க அட்டைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசாங்கம் வறுமையில் வாடும் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது பசிய போக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள புதுப்பிக்க தவறிய அட்டைதாரர்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ள கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கல்லூரி நிலத்தை வழங்கும் தேமுதிக - பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை