திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கட்டடப் பணி செய்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சங்கிலி என்பவர் தனது அண்ணன் அழகர்சாமியிடம் தகராறு செய்ததை அறிந்து தட்டி கேட்பதற்கு சங்கிலியின் வீட்டிற்கு கிருஷ்ணமூர்த்தி சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் மதுப்போதையில் இருந்த சங்கிலிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே கடுமையான தகராறு நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் சங்கிலி கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.