தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்! - சிறுமலை விவசாயிகள் பட்டா விவகாரம்

திண்டுக்கல்: சிறுமலை விவசாயிகளின் சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Marxist Communist Party protest in dindigul
Marxist Communist Party protest in dindigul

By

Published : Aug 18, 2020, 3:41 AM IST

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் உள்ள அகஸ்தியர் புரத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், பசலி கார்டு நவாப் படுகை பகுதிகளில் விவசாய நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாலபாரதி தலைமை வகித்தார். மேலும், கட்சியின் ஒன்றியச் செயலாளர் அஜாய் கோஷ், அடியனூத்து ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர், துணை வட்டாட்சியர் சுகந்தியுடன் பாலபாரதி உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து வருகிற 28ஆம் தேதி அமைதிக் கூட்டம் நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details