தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் ஊரடங்கு: நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம்! - கரோனா எதிரொலி

திண்டுக்கல்: மக்கள் ஊரடங்கை முன்னிட்டு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் புதுமணத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.

marriage
marriage

By

Published : Mar 22, 2020, 5:35 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குளாகி உள்ளனர். இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய ,மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி உத்தரவின் பேரில், இன்று (மார்ச் 22) இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள அணைத்து பகுதிகளிலும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ராஜேஷ் கண்ணன், உமா மகேஸ்வரி என்ற புதுமண தம்பதியினர், ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட தேதியான இன்று (மார்ச் 22) காலை திருமணம் செய்துகொண்டனர்.

நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம்!

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், இருதரப்பு பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தத் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் கை கழுவிய பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

திருமணத்தில் கலந்துக்கொண்ட உறவினர்கள் கூறுகையில், "ஆறு மாதத்திற்கு முன்னரே நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. ஆதலால் இதனை தேதி மாற்ற இயலவில்லை. இருப்பினும் எங்கள் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கு பெற்றோம்" என்றனர்.

இதையும் படிங்க: ரூபாய் நோட்டு மூலம் பரவுமா கரோனா - அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details