திண்டுக்கல்: சமுத்திராப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கைலாசம் (70). ஆன்மிகத்தில் நாட்டமுடைய இவர், 10 ஆண்டுகளுக்கு முன் சமுத்திராப்பட்டி கோம் பையன் மேடு எனும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வேப்ப மரம் வளர்த்து வந்தார். வேப்பமரம் வைத்த இடத்தில் அரசமரமும் தானாகவே வளர்ந்துள்ளது. இங்கு முக்கிய விசேஷ தினங்களில் பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்.
திண்டுக்கல்லில் விநோதம்; வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் கல்யாணம்! - neem tree
உலக நன்மை வேண்டி நத்தம் அருகே சமுத்திராப்பட்டியில் வேப்பமரத்திற்கும், அரச மரத்திற்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தினர்.
வேப்பமரத்திற்கும் ஆலமரத்திற்கும் கல்யாணம் பண்ணா நல்லது நடக்குமா?
இதனைப் பொதுமக்கள் சிலரும் பின்பற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், உலக நன்மை வேண்டி ஊர் பொதுமக்கள் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மணமகன் அரசன், மணமகள் வேம்பு நாயகி என அழைப்பிதழில் பெயர் அடித்து மக்களுக்கு விநியோகித்தனர்
இதையும் படிங்க: கொடைக்கானலில் தொடர் மழை - குடையுடன் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்