திண்டுக்கல்:சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. தடகள வீரரான இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். அதைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நாககாளியம்மன் கோயிலில் மாரியப்பன் தங்கவேலு சாமி தரிசனம்! - dingigul news
பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள அருள்மிகு நாககாளியம்மன் கோயிலில் பாராஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் தங்கவேலு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார்.
நாககாளியம்மன் கோயிலில் மாரியப்பன் தங்கவேலு சாமி தரிசனம்!
இந்தநிலையில், மாரியப்பன் குடும்பத்தினருடன் இன்று (செப்.15) பழனி சென்றார். பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள அருள்மிகு நாககாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அங்கு வந்த பொதுமக்கள், மாரியப்பன் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: 'காவல்துறையினர் தான் ஹீரோக்கள்' - மாரியப்பன் தங்கவேலு