திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம் பூஜை, மேளதாளம், மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் வண்ண மலர்களாலும் நாணல்புல், மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.