நாம் தமிழர் கட்சியின் சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலி கான், தினமும் புதுமையான வகையில் பரப்புரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென மயங்கும் நிலைக்கு சென்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி - மன்சூர் அலி கான்
திண்டுக்கல்: உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்சூர் அலிகான்- கோப்புப்படம்
இதனையடுத்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெயில் மற்றும் அதிக அலைச்சல் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மன்சூர் அலி கானுடன் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் உள்ளனர்.