திண்டுக்கல் மாவட்டம், பழனி, பத்ரா தெருவை சேர்ந்தவர் இருளப்பன் (20). இவர் பழனியில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
ஜாமீனில் வெளிவந்த நபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - JAMIN
திண்டுக்கல்: சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞரை, அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம், பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![ஜாமீனில் வெளிவந்த நபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3310887-thumbnail-3x2-dindigul.jpg)
தினமும் பழனி நகர் காவல் நிலையித்தில் இருளப்பன் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை, வழக்கம் போல காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிக்கு செல்லும்போது இருளப்பனை, அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருளப்பனை தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் பழனி நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.