தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலையில் கல்லைப் போட்டு கொலை! - பாலத்திற்கடியில் கிடந்த ஆண் சடலம்! - பழனியில் 35 வயது நபர் கொலை

திண்டுக்கல்: பழனியில் பாலத்திற்கு கீழே, தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்த, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

police seized the body

By

Published : Nov 1, 2019, 12:50 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து பாலசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது ராமநாதன் நகர். இப்பகுதியில் உள்ள வறட்டாறு பாலத்திற்கு அடியில், ஒரு ஆண் சடலம் நிர்வாணமாகக் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பழனி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அங்கே 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டும், கொடூரமாகத் தாக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கொலையான நபர் யார் என்றும், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:திட்டம் தீட்டி கொலை செய்த கும்பல்; இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details