திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன். இவர் 2018ஆம் ஆண்டு மே மாதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சௌந்தரபாண்டியனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் குற்றஞ்சாட்டப்பட்ட சௌந்தரபாண்டியனுக்கு பள்ளி மாணவியை கடத்திச் சென்றதற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் வழங்கினார்.