தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி முருகன் கோயில் உண்டியலில் திருட்டு: நடந்தது என்ன? - பழனி முருகன்

திண்டுக்கல்லில் உள்ள பழனி முருகன் கோயில் உண்டியலில் ரூ.300 திருடியதற்காக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

பழனி முருகன் கோயில் உண்டியலில் திருட்டு
பழனி முருகன் கோயில் உண்டியலில் திருட்டு

By

Published : Dec 8, 2022, 5:36 PM IST

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயில் சார்பில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளன.

தென்காசியினைச் சேர்ந்த சுந்தர் என்பவர் உண்டியலில் இருந்து ரூ.300 பணத்தை நோட்டமிட்டு திருடியது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. பின் கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டிகள் சுந்தரை பிடித்து மலை அடிவாரத்தில் உள்ள அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் கோயில் உண்டியலில் பணத்தை திருடியதற்காக சுந்தரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:30 நாய்கள் அடித்துக் கொலை; ஊராட்சிமன்றத் தலைவியின் கணவர் உட்பட நால்வர் கைது

ABOUT THE AUTHOR

...view details